கோவையில் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் சென்ற இன்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை..! பட்டப்பகலில் துணிகரம்!

கோவை: கோவையில் பொங்கல் விழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த தனியார் இன்ஜினியர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் பொங்கல் விழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த தனியார் இன்ஜினியர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி ராகவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இவரது சொந்த ஊரான ஈரோட்டுக்கு பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் சென்று தனது சொந்த ஊரில் கொண்டாட விக்னேஷ் விரும்பினார். இதையடுத்து, கடந்த 14ம் தேதி விக்னேஸ்வரன் குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஈரோட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நீங்கள் ஊருக்கு வந்து விட்டீர்களா என கேட்டுள்ளனர். இல்லை நான் எனது ஊரில் தான் இருக்கிறேன் என்ன விஷயம் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் உங்கள் வீடு திறந்து கிடக்கிறது என தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தடயவியல் நிபுணர்கள் உடன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறக்கப்பட்டு அதில் உள்ள அனைத்து துணிகளும் சிதறிக்கிடந்தது. இதனால் ஏதாவது நகை பணம் கொள்ளை போய் இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். அப்போது பீரோவில் 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிவித்தார். ஆனால் பீரோவில் நகை இல்லை. ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தொடர்ந்து சரவணம்பட்டி பகுதிகளில் வீட்டை உடைத்து கைவரிசை காட்டும் கும்பல் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....