கோவை: கோவை மாநகராட்சியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, மாநகரப்பொறியாளர் ஆ.லட்சுமணன் மற்றும் அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள் அமைப்பது, குடிநீர் வசதி, பாதாளச் சாக்கடை அமைப்பது போன்ற ஏராளமான வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைப் பணிகள், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல் போன்ற அடிப்படை கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இப்பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் செல்வசிந்தாமணிகுளம், கிருஷ்ணம்பதிகுளம், செல்வம்பதி, குமாரசாமி குளம், சிங்காநல்லார் குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்களில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திவான் பகதூர் சாலை மாதிரி சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், உக்கடம் சூரியமின்சக்தி நிலையம், 247 குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மற்றும் வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், வாகனங்கள் மூலமாக வீடுவீடாக குப்பைகள் சேகரிக்கும் பணிகள் போன்ற அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்' என்றார். மேலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒவ்வொரு மண்டலத்திலும் வார்டு வாரியாக சாலைகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். எஞ்சியுள்ள சாலைப்பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.