பொள்ளாச்சி - கோவை ரோட்டில் வாகன விபத்தில், டாக்ஸி ஓட்டுநர் பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (55), ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரேமலதா(48). இவர்கள், இருவரும் நேற்று பொள்ளாச்சி வருவதற்காக இருசக்கர வாகனத்தில் கோவை ரோடு -நஞ்சை கவுண்டன்புதூர் அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்த போது, அவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (55), ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரேமலதா(48). இவர்கள், இருவரும் நேற்று பொள்ளாச்சி வருவதற்காக இருசக்கர வாகனத்தில் கோவை ரோடு -நஞ்சை கவுண்டன்புதூர் அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்த போது, அவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.



கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த பத்மநாபன் (28) என்பவர் இயக்கி வந்த நான்கு சக்கர வாகனம், தங்கராஜ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், பிரேமலதா படுகாயங்களுடன் போராடி வந்தார். பின்னர், அங்கு சென்ற பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் காயமடைந்த பிரேமலதாவை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், தங்கராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...