திருப்பூர் ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகளுக்கு முன்னுரிமை!

திருப்பூர்: திருப்பூரில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்காக கால்கோள் விழா நடைபெற்றது. அப்போது காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவதாக ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்காக கால்கோள் விழா நடைபெற்றது. அப்போது காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவதாக ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.



அதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது.



பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த இருப்பதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 500 காளைகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாகவும் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப் போவதாகவும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



இதனைத் தொடர்ந்து அழகு மலை அடிவாரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டி, கும்மியடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...