பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறான செய்தி பரப்பியதாக திமுகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி திமுக நகர முரசொலி மன்ற துணை செயலாளர் நாகராஜ் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் அவர்களுடைய முகநூல் பக்கத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை பற்றி, சம்பந்தமில்லாமல் இழிவாக சித்தரித்தும், வேறு பெண்களுடனும் தொடர்பு இருப்பதாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில், அவதூறு செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அதிமுகவின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ்குமார், அவதூறு பரப்பிய இருவரிடமும் விளக்கம் கேட்டபோது, அவர்கள் இருவரும், சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக, சதீஸ்குமார் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, திமுகவை சேர்ந்த நாகராஜ் மற்றும் சுதர்சன் இருவர் மீதும் அவதூறு செய்தி பரப்புவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது, உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.