கோவை விடுதியில் வெங்காய வியாபாரி, கூலி தொழிலாளி தூக்குப்போட்டு சாவு!

கோவை: இருவேறு சம்பவங்களில் வெங்காய வியாபாரி மற்றும் கூலித் தொழிலாளி ஆகியோர் தங்கியிருந்த விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


கோவை: இருவேறு சம்பவங்களில் வெங்காய வியாபாரி மற்றும் கூலித் தொழிலாளி ஆகியோர் தங்கியிருந்த விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் ராஜகோபால சுவாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). வெங்காய வியாபாரியான இவர் தனது தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இதுவரை ரூபாய் 20 லட்சம் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவர் இப்படி பலரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டதால் விரக்தியடைந்த அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ஒவ்வொரு ஊராக சென்று வந்த அவர் கடந்த 29-ஆம் தேதி கோவை வந்து ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று நீண்டநேரமாகியும் அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் விஷ்வ தாஸ் (வயது 25). இவர் கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து கோவையில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வரை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது அறையில் தூக்கில் தொங்கினார். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...