கோவை மாவட்டத்தில் 98 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம்..!
கோவை: தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன்கார்டு தாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் முந்திரி, கரும்பு, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது. கோவை மாவட்டத்தில், 98 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி குமரேசன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரத்து 60ரேஷன்கார்டு தாரர்கள் உள்ளனர். இதில், 10 லட்சத்து 17 ஆயிரத்து 460ரேஷன்கார்டுதாரர்கள் அரசின் பொங்கல் பரிசு பெற தகுதி உள்ளவர்கள்.இவர்கள், தவிர கடந்த ஆண்டு ரேஷன்கார்டு கேட்டு 17 ஆயிரம் பேர்புதிதாக விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், பலருக்கு ஸ்மார்ட் கார்டுஅச்சடிக்குப்பட்டு விநியோகம் செய்யும் பணி நடைபெறுகிறது. மேலும், சிலருக்கு ரேஷன்கார்டு கிடைக்காமல் உள்ளனர். இந்த நிலையில், இவர்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
தற்போது, 98 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு விட்டது. இன்னும், 27 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அவர்கள் வரும் 25-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேஷன்கடைக்கு சென்று பொங்கல் பரிசினை பெற்றுக்கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு விநியோகத்தில் இதுவரை முறைகேடு எதுவும் நடைபெற்றதாக புகார்கள் வரவில்லை. இறந்தவரின் ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் தவறானது,
இவ்வாறு அவர் கூறினார்.