கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ தொற்று தடுப்பூசி முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ தொற்று தடுப்பூசி முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொறு மையத்திலும் நாளொன்றுக்கு 100 பேர் வீதம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
அதன்படி கோவையில் கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கோவையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக 5 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் சூலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த மையம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
"கோவையில் ஒரு மையத்தில் நாளொனறுக்கு 100 பேர் வீதம் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். தொடர்ந்து 28 ஆவது நாள் 2 ஆவது டோஸ் தடுப்பூசி போடப்படும். முதல்கட்டமாக 4 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது. தொடர்ந்து, படிப்படியாக கொரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கை உயரதப்படும்", என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், அரசு மருத்துவ கல்லூரி டீன் காளிதாஸ், இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.