கோவை விடுதியில் சூதாட்டம்: அதிரடி ரெய்டில் 30 பேர் கைது, ரூ.56 ஆயிரம் பறிமுதல்!

கோவை: கோவையில் செயல்பட்டு வந்த விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவலறிந்து போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது 30 பேரை கைது செய்த போலீசார் 56 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர்.


கோவை: கோவையில் செயல்பட்டு வந்த விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவலறிந்து போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது 30 பேரை கைது செய்த போலீசார் 56 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர்.

கோவை சிங்காநல்லூர் சாரதி நகர் பகுதியில் உள்ள `ரெயின்ட்ரீ கன்ட்ரி கிளப்' என்ற விடுதியில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிங்காநல்லூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முதல் தளத்தில் சூதாட்டம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 56 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். கிளப் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதுகுறித்து கோவை சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறுகையில், `குறிப்பிட்ட கிளப் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அனுமதி பெற்றுள்ளது. ஆனால் அங்கு சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது' என்றார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளப்பில் ஒரே நேரத்தில் 50- க்கும் மேற்பட்டோர் அமர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுமளவுக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மது உள்ளிட்ட போதைப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதற்கேற்றார்போல பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும். இங்கு பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் டோக்கன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பிங்க் நிறத்தில் 5, 10, 20 என்ற எண்கள் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து சீட்டுக் கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சூதாட்ட கிளப்பைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கிளப் வாசலில் எப்போதும் போலீஸ் நடமாட்டத்தைக் கண்காணிக்க பவுன்சர் எனப்படும் பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேல் கிளப் செயல்பட்டு வந்துள்ளது. இது உளவுத்துறையினருக்கும், போலீசாருக்கும் தெரியாமலிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....