கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க எப்.எம் ரேடியோ வசதி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டீன் காளிதாஸ் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமன்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அத்துடன் இங்கு நோயாளிகளின் வசதிக்காக பல்வேறு நவீன கருவிகள் வாங்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெறும் பலர் மன அழுத்தத்தில் இருப்பார்கள். அதை போக்கும்விதமாக வானொலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறியதாவது:- `கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும்போது அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அவர்களின் உடல்நிலை மற்றும் குடும்பத்தினரை நினைத்து மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற சூழலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைவிட மன அழுத்தத்தைப் போக்கும் வழி முறைதான் முக்கியம்.
இதை கருத்தில்கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்வை அளிக்கும்விதமாக வானொலி எப்.எம் வசதி ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு பிரிவில் ஆண்கள் பெண்களுக்கென்று தனியாக செயல்பட்டு வரும் பிரிவில் 8 இடங்களில் வானொலிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் செய்தி மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் மன அழுத்தமில்லாமல் புத்துணர்ச்சி பெறுவார்கள்'. இவ்வாறு அவர் கூறினார்.