கோவை: தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கோவை தமிழாசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அன்வர் பாஷா. கோவை தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர் 7 நூல்களை எழுதி இருக்கிறார். திருக்குறளை மாணவர்களுக்கு எளிமையாகக் கற்பித்த தோடு இலக்கிய சொற்பொழிவு வாயிலாக குறள்நெறி கருத்துக்களை பரப்பி வருகிறார். இவரது இலக்கியச் சேவையை பாராட்டி தமிழக அரசு சார்பில் 2019 -ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. இப்போது 2020- ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதை அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் ஆசிரியராக இருந்த காலத்தில் ஒரு நாள் கூட தவறாமல் தினமும் பள்ளியின் கரும்பலகையில் திருக்குறளை எழுதி வந்தேன். குறள் நெறி கருத்துக்களை மக்களிடம் பரப்புவதுதான் எனது பணி' என மகிழ்ச்சியுடன் கூறினார். தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.