பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ. 346 கோடிக்கு மது விற்பனை. கடந்த ஆண்டைவிட 85.78 கோடி விற்பனை குறைவு..!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மார்க் கடைகளில் ரூபாய் 346 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. எனினும், இது கடந்த ஆண்டைவிட குறைவு, என கூறப்படுகிறது. கோவையில் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், டாஸ்மாக்கில் 60.76 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.



சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மார்க் கடைகளில் ரூபாய் 346 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. எனினும், இது கடந்த ஆண்டைவிட குறைவு, என கூறப்படுகிறது. கோவையில் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், டாஸ்மாக்கில் 60.76 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தீபாவளி, புத்தாண்டு, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை படுஜோராக நடைபெறும். அந்த நாட்களில் மது பிரியர்கள் போட்டிபோட்டு மதுபாட்டில்களை வாங்கிச் செல்வார்கள். அதற்கு, அடுத்தபடியாக பொங்கல் பண்டிகை நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கக்கூடும். இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ம் தேதியிலிருந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 346 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனை ஆகி இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

போகி நாளன்று 147 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் மூலம் விற்பனை கணக்கிடப்படுகிறது. அதன்படி, கடந்த 13-ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று சென்னை மண்டலத்தில் சுமார் 39 கோடியே 8 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 20 கோடியே 23 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூபாய் 36 கோடியே 72 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூபாய் 28 கோடியே 15 லட்சம், கோவை மண்டலத்தில் ரூபாய் 24 கோடியே 57 லட்சம் என மொத்தம் ரூபாய் 147 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனையாகி இருக்கின்றன.

பொங்கல் நாளன்று 346 கோடியே 5 லட்சத்துக்கு மது விற்பனை

அதேபோல், கடந்த 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று சென்னை மண்டலத்தில் ரூபாய் 45 கோடியில் 13 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 41 கோடியே 17 லட்சத்திற் க்கும், சேலம் அந்தரத்தில் ரூபாய் 37 கோடியே 57 லட்சத்துக்கும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 30 கோடியே 24 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 35 கோடியே 19 லட்சத்துக்கும் என மொத்தம் ரூபாய் 198 கோடியே 30 லட்சத்திற்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 13, 14 ஆகிய இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் ரூபாய் 346 கோடியே 5 லட்சத்துக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகி உள்ளது.

இந்த ஆண்டு விற்பனையில் மந்தம்

விற்பனையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆண்டு விற்பனை சற்று மந்தமாக இருப்பதை காட்டுகிறது. கடந்த ஆண்டு விற்பனையை பொருத்தவரையில் பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை தினத்தன்று தமிழகம் முழுவதும் ரூபாய் 178 கோடியே 44 லட்சமும், பொங்கல் பண்டிகை தினத்தன்று ரூபாய் 253 கோடியே 10 லட்சத்திற்கும் என மொத்தம் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 431 கோடியே 83 லட்சத்திற்கு விற்பனை ஆகி இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூபாய் 85 கோடியே 78 லட்சத்து விற்பனை குறைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...