கோவை: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நீரில் சிக்கிய 6 இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் ( வயது 20), கிங்ஸ்லி (வயது 21), மாதேஷ் (வயது 21), சியாம் சுந்தர் (வயது 21), கண்ணன் பாபு (வயது 20) ஜெயராஜ் (வயது 21). கல்லூரி நண்பர்களான இவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை அருகே உள்ள விளாமரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் பவானி ஆற்றில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்தது. மேலும் அந்த இடத்தில் நீர்ச்சுழல் இருந்ததால் இளைஞர்கள் நீரில் சிக்கித் தவித்தனர்.
தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களில் கயிற்றைக் கட்டி ஒவ்வொன்றாக அனுப்பி ஒவ்வொருவராக உயிருடன் மீட்டனர். சாதுர்யமாக செயல்பட்டு மீட்புப் பணியில் சேர்ந்த ஈடுபட்ட தீயணைப்புத் துறையினருக்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.