கோவை சிங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பரிதாப பலி

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ரத்தினபுரி இடையப்பகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்

(26). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூர் காமராஜபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதியது.

இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதியில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...