கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 53,475 ஆக உயர்வு!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53,475 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 87 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 625 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...