பொள்ளாச்சி: தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கல் நிகழ்ச்சியை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையம் சார்பில், ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில், இன்று சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், ஜாதி, மத பேதமின்றி, அனைத்து சமூகத்தினரும் ஒன்றுகூடி புதுப்பானையில் பொங்கல் வைத்து, காவல் துறையினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தாலுகா காவல் நிலைய ஆய்வாளர், விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், பொங்கல் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறுவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

போட்டிகளில் கலந்துகொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.