கோவை: கோவை நெகமம் அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு சேவல்களும், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை அருகே உள்ள நெகமம் தாசநாயக்கன்பாளையம் காத்தாடி காடு பகுதியில் சேவல் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நெகமம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு சேவல் வைத்து சூதாடிக்கொண்டிருந்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் ரமேஷ், அங்கமுத்து, முகவனூர் மணிகண்டன், சுல்தான்பேட்டை வடிவேல், ஜக்கார் பாளையம் கிட்டுசாமி, எஸ்.குமாரபாளையம் திருமலைசாமி, மெட்டுவாவி செந்தில்குமார் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள் ரூபாய் 20 ஆயிரத்து 430 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.