வரும் தேர்தலில் தே.மு.தி.க. மாபெரும் வெற்றி அடையும்: கோவை பொங்கல் விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

கோவை: வரும் தேர்தலில் தே.மு.தி.க. மாபெரும் வெற்றி அடையும் என்று கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.



கோவை: வரும் தேர்தலில் தே.மு.தி.க. மாபெரும் வெற்றி அடையும் என்று கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தே.மு.தி.க.வினர் தமிழகம் முழுவதும் பொங்கல் விழா நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கோவை மாநகர மாவட்டப் பகுதிகளில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பொங்கல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் காட்டன் செந்தில் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முருகன், வனிதா துரை, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், பொன்ராஜ், சண்முகம், வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒன்றியத்துக்குட்பட்ட கோவில்பாளையம் பஸ் நிலையம் எதிரே கட்சிக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசும்போது, `இந்த 2021 ஆம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு சிறந்த ஆண்டாக விளங்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் முரசு சின்னம் மாபெரும் வெற்றி அடையும்' என்றார். முன்னதாக எஸ்.எஸ்.குளம் பகுதிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, நிர்வாகிகள் சிவ இளங்கோ, குணசேகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் ரங்கராஜ், பாபு, ராமலிங்கம், சிவலிங்கம், தீனதயாளன் ஒன்றிய நிர்வாகிகள் குழந்தைவேலு, மோகன்ராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...