பொங்கல் விழாவில் சிலம்பம் சுற்றிய அமைச்சர் வேலுமணி!

கோவை: பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி சிலம்பம் சுற்றினார். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


கோவை: பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி சிலம்பம் சுற்றினார். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நல்லறம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் விழா தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டனர்.

விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பறை இசை மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் இணைந்து தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பறை இசை இசைத்ததுடன் சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.



அப்போது அவர்களை பாராட்டிய அமைச்சர் வேலுமணி அவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினார். இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...