மாணவி குளிப்பதை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் கைது!

கோவை: மாணவி குளிப்பதை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: மாணவி குளிப்பதை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சூலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை இந்தச் சிறுமி தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் குளிப்பதை மர்ம நபர்கள் யாரோ குளியலறையில் உள்ள ஜன்னல் வழியாக செல்போன் மூலம் படம் பிடிப்பதை மாணவி பார்த்து கூச்சலிட்டார். இதனால் செல்போனில் படம் பிடித்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுபற்றி மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

செல்போன் மூலம் படம் பிடித்த அந்த வாலிபர்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள் செந்தில்குமார் (வயது 27), காளிராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரண்டு வாலிபர்களையும் மாணவியின் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மாணவி மீது ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் எதற்காக எங்களைக் காட்டிக் கொடுத்தாய் என்று மாணவியைச் சந்தித்து கேட்டதுடன் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவி காயமடைந்தார்.

இதுபற்றி மாணவியின் பெற்றோர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், காளிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி இரண்டு வாலிபர்களையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...