மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி சாவு!

கோவை: தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.


கோவை: தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஆவாரம்பாளையம், ஷோபா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் குரும்பபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக செல்வராஜ்மீது மின்கம்பி பட்டு தூக்கி வீசியது.

இதில் கீழே விழுந்த அவர் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் பாபு அளித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...