பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம் வன எல்லையில் காட்டு யானை நடமாட்டம்; விவசாயிகள் அச்சம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம், கரட்டுப்பாளையம் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதியாகும்.



பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம், கரட்டுப்பாளையம் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதியாகும்.

இங்கு தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி வனத்திலிருந்து காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், அப்பகுதியில் இன்று 2 காட்டு யானை வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் உலா வந்தது. இதையடுத்து, பீதியடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த பொள்ளாச்சி வனத்துறை ஊழியர்கள், காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...