கோவை: வரும் 17-ந்தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென அமைச்சர் வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்தநாள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி வருகிற 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104 -வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூராட்சி, ஊராட்சிகளில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும் அனைத்துப் பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.