மஞ்சூர் அருகே சாலையில் விழுந்து கிடந்த பாறைகள்: ஜே.சி.பி. உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கிண்ணக்கொரை கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்த மரம் மற்றும் பாறைகளை ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கிண்ணக்கொரை கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்த மரம் மற்றும் பாறைகளை ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சாரல் மழையும், கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை முனீஸ்வரர் கோயில் அருகே மண் சரிந்து விழுந்து கிடந்தது.



மேலும் பெரிய பாறைகளும், மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் விழுந்து கிடந்தன. இதனால் இரிய சீகை, அண்ணா நகர் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.



இதுபற்றி இப்பகுதி மக்கள் கிராம உதவி ஆய்வாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஜே.சி.பி. வாகன உதவியுடன் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த பாறைகளையும், மண் குவியல்களையும் சீர்செய்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...