பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்-கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா..!

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்-கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவு வழங்க தடை செய்யப்பட்டது.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் - கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக. சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவு வழங்க தடை செய்யப்பட்டது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினரால், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விவசாய தோட்டங்களில், புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் இங்கு உள்ள கும்கி யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், டாப்சிலிப் பகுதியில் யானை சவாரி மூலம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், இந்த யானைகள் பயன்படுத்தப்படுகிறது.



இந்த யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழாவானது, வனத்துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, யானைகளின் நலன் கருதி,கோழிகமுத்தி யானைகள் முகாமிலேயே, இந்த யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இன்று, முகாமில் உள்ள யானைகளை ஒன்றாக நிற்க வைத்து, பூமாலை அணிவித்து யானைகள் அலங்கரிக்கபட்டன. மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்துபாரம்பரிய முறைப்படி, புது பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, பொங்கல் உள்ளிட்டவற்றை படையலிட்டு பூஜைகள் செய்து யானைகளுக்கு வழங்கினர். கொரோனா அச்சம் காரணமாக, சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில், அனுமதிக்கப்பட்டனர்.



மேலும், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவளிக்க வனத்துறை தடை விதித்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....