இன்று திருவள்ளுவர் தினம், இறைச்சி விற்க தடை: அதிகாரிகள் சோதனை!

கோவை: இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா என்று மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா என்று மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளுவர் தினமான இன்று தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் மாநகராட்சியால் நடத்தப்பட்டுவரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனூர் மாடு அறுவைமனைகள், துடியலூர் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின்கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர்மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருந்தார். இதையடுத்து இன்று இறைச்சி கடைகள் இயங்குகின்றனவா? என மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...