புதுடெல்லி: லேண்ட்லைன் போனில் இருந்து மொபைல் போனை தொடர்பு கொள்ளும்போது செல்போன் எண்களுக்கு முன்பு பூஜ்ஜியம் சேர்க்கும் புதிய நடைமுறை இன்று (15-ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.

லேண்ட்லைன் என்று அழைக்கப்படும் தரைவழி தொலைபேசியில் இருந்து எந்தவொரு செல்போன் எண்ணையும் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்றால் அந்த எண்களை டயல் செய்யும்போது அதற்கு முன்பாக முதலில் பூஜ்ஜியம் (0) சேர்த்து டயல் செய்ய வேண்டும். இந்தப் புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டுமென தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு கடந்த மே மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்திருந்தது.
இதன் அடிப்படையில் போதுமான எண்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும்விதமாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை மத்திய தொலைத்தொடர்புதுறை புதிய முடிவொன்றை எடுத்துள்ளது. இதன்படி 2021 ஜனவரி 15-ந்தேதியான இன்று முதல் லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து மொபைல் போன்களுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அழைப்புகளின்போதும் முன்னதாக பூஜ்ஜியத்தை (0) அழுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.