பொள்ளாச்சி பகுதியில் பட்டி கட்டி மாட்டுப் பொங்கலை கொண்டாட தயாராகி வரும் விவசாயிகள்..!

கோவை: உழவர் பெரு மக்களின் முக்கிய பண்டிகையான மாட்டுப்பொங்கல், நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, விவசாயத்தை பிரதானமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.



கோவை: உழவர் பெரு மக்களின் முக்கிய பண்டிகையான மாட்டுப்பொங்கல், நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, விவசாயத்தை பிரதானமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.



தாங்கள் வைத்திருக்கும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பாரம்பரிய முறைப்படி பனை ஓலையில் பட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



ஆண்டு முழுவதும் விவசாய பணியில் தங்களுக்கு உறுதுணையாகவும், நண்பனாகவும் விளங்குகின்ற கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகும்.

நாளை இரவு பட்டிக்குள் மாடுகளை அடைத்து, ஏழு வகையான பொங்கல் வைத்து உற்றார் உறவினர்களுடன் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளதாகவும், அதேபோல் உழவர் பெருமக்களுடன் விவசாய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக முதலாளி, தொழிலாளி என்ற வித்தியாசமில்லாமல் சகோதரப் பாசத்துடன் ஒன்றாக அமர்ந்து அவர்களுடன் உணவு அருந்தி மாட்டுப் பொங்கலை கொண்டாட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை இரவு மாட்டு பொங்கல் விழா விவசாயத் தோட்டங்களில் களைகட்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...