தொடர் மழையால் ஆழியார் குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு..!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் குரங்கு அருவிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் குரங்கு அருவிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

பொள்ளாச்சி மட்டுமின்றி கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளின் ஒரு இடமாக ஆழியார் உள்ளது.



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பொங்கல் தினமான இன்று, காலை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குரங்கு அருவிக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.



மேலும், அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில், வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...