உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பொங்கல் விழா, முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை!
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் தப்பாட்டம்,மயிலாட்டத்துடன் சுற்றுலா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பங்கேற்ற மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள்தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலா நகரமான உதகை தாவரவியல் பூங்காவில், நீலகிரியில் வசிக்கும் தோடர், படுகர் போன்ற மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள், தோட்டத் தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுடன் இணைந்து சுற்றுலா பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில், தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் தப்பாட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் சுற்றுலாப் பயணிகளுடன் மாவட்ட ஆட்சியரும்ஆர்வத்துடன் கலந்துகொண்டுமகிழ்ந்தார்.

அப்போது பேட்டியளித்த, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. அதே வேளையில், சுற்றுலாப்பயணிகள் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றிசுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கலாம் என்று ஆறு வேண்டுகோள்களை விடுத்தார்.
அதை மீறி முகக் கவசம் அணியாமல் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், தங்கும் விடுதிகளில் முகக் கவசம் அணியாமல் சுற்றுலாப்பயணிகள் தங்கினால்விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்தார்.