வால்பாறையில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா!

கோவை: வால்பாறையில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வளாகத்தில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை, வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பு இணைந்து பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர்.



விழாவுக்கு மாவட்ட ஆட்சியாளர் ராசாமணி தலைமை தாங்கினார். விழாவில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் டி.அரவிந்த், வால்பாறை நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.

கோலப்போட்டி, பொங்கல் வைத்தல், லெமன் அண்ட் ஸ்பூன், உறியடித்தல், மியூசிக்கல் சேர், கபடி போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற அனைவருக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்கள், சுழல் கோப்பை வழங்கப்பட்டது. அம்மா ஸ்கூட்டரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கோவை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் டி.அரவிந்த் குமார், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ் குமார் மற்றும் வால்பாறை சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.சுரேஷ் அலி மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன் மற்றும் அ.தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயன்பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கும், கோவை மாவட்ட சுற்றுலாத்துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...