கொரோனா காலத்தில் சேவையாற்றிய 20 தொண்டு நிறுவனங்களுக்கு விருது: சிறுசேவை அறக்கட்டளை வழங்கியது!

கோவை: கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில் கோவை மாவட்டத்தில் மக்களுக்கு சமூக சேவையாற்றிய 20 தொண்டு நிறுவனங்களுக்கு சிறுசேவை அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

கோவை: கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில் கோவை மாவட்டத்தில் மக்களுக்கு சமூக சேவையாற்றிய 20 தொண்டு நிறுவனங்களுக்கு சிறுசேவை அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

சிறுசேவை அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம், சுற்றுப்புறச்சூழல் போன்ற சேவைகளை மாதந்தோறும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். சிறுசேவை அறக்கட்டளை மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறுசேவை அறக்கட்டளையிலுள்ள 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களால் முடிந்த தொகையை அளித்து, உதவி தேவைப்படுவோருக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. 



மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் தொடங்க ஊதுவத்தி, பெட்டிக்கடை, தள்ளுவண்டி வைக்கவும் அவர்களுக்குத் தேவையான பொருட்களையும், வயது முதிர்ந்தோருக்கு மருந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று சிறுசேவை அறக்கட்டளையின் ஓராண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழா மற்றும் உடன் பணியாற்றிய நல்லுள்ளங்களுக்கான பாராட்டு விழா கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. 



நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் மற்றும் தடகள வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில் கோவை மாவட்டத்தில் மக்களுக்கு சமூக சேவையாற்றிய 20 தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறுசேவை தொண்டு நிறுவனத்தின் தலைவர் சரவணக்குமார், துணைத்தலைவர் கல்பனா முத்துராமலிங்கம், பொருளாளர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



இத்தகவலை சிறுசேவை அறக்கட்டளைத் தலைவர் சரவணக்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...