பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ விசாரணை முடிந்து ஹெரன்பால் சிறையில் அடைப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக 2019-ஆம் ஆண்டு சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார்,வசந்தகுமார், மணிகண்டன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக 2019-ஆம் ஆண்டு சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார்,வசந்தகுமார், மணிகண்டன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி வடுக பாளையத்தை சேர்ந்த அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் (36), ஆச்சிபட்டியைச் சேர்ந்த பாபு (27), சங்கம்பாளையம் சேர்ந்த ஹாரன் பால் (29), ஆகியோரை கடந்த 5-ம் தேதி சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மூவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஹாரன் பாலை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை மகிளா கோர்ட்டில் சிபிஐ போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

இதனையடுத்து ஹாரன் பாலை சிபிஐ போலீசார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து டி.எஸ்.பி ரவி தலைமையில் 2 நாட்கள் விசாரணை நடத்தியதில், அவர் பாலியல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்களை சி.பி.ஐ போலீசாரிடம் தெரிவித்ததாக, கூறப்படுகிறது.

இரண்டு நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், நேற்று இரவு சிபிஐ போலீசார் கோர்ட் விடுமுறை என்பதால் ஆர்.எஸ் புரத்தில் உள்ள மகிளா கோர்ட் நீதிபதி நந்தினி தேவி வீட்டில் அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினார். அப்போது, பாலை 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, ஹாரன்பால் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

விசாரனையில், சிபிஐ அதிகாரிகளிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பாலியல் வழக்கு தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர், என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...