நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக்கண்காட்சி வரும் மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு மலர் செடிகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலை துறை துணை இயக்குநர் குருமணி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக சால்வியா, டேலியா நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு பழக்கண்காட்சிக்காக மூன்று இலட்சத்து பத்தாயிரம் மலர் நாற்றுகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட உள்ளது.
இதில் சால்வியா, சைக்ளமேன், ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, ஜெராேனியம் போன்ற 29 வகையான மலர் நாற்றுக்கள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு 152 வகையான நாற்றுகளும் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அனிதா, சிம்ஸ் பூங்கா மேலாளர் லட்சுமணன் உட்பட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.