கோவை ஆலாந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை பேரூரை அடுத்த ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் சஞ்சீவிகுமார் (20). இவர் கற்பகம் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவினர் ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் அனந்தராமன் (17). இவர் ஆலாந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் ஆலாந்துறையில் உள்ள வீட்டிலிருந்து இவரது அத்தையை அழைத்துக் கொண்டு சஞ்சீவ் குமாரின் தந்தை காரில் சென்னனூரில் உள்ள அத்தையின் வீட்டிற்கு சென்று விட சென்றனர்.

இந்த நிலையில், அத்தையை வீட்டில் இறக்கி விட்டு, திரும்பி வரும் போது கார் சிறுவாணி சாலையில் வேகமாக சென்றது.



திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுவாணி சாலையில் உள்ள சிவசக்தி திருமண மண்டபம் அருகே சாலையின் இடதுபக்கம் உள்ள வாகை மரத்தில் வேகமாக மோதியது.



இதில் காரில் இருந்த சஞ்சீவ் குமார், அனந்த ராமன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் காருக்குள் சிக்கினார். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. கார் மோதிய சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்த பார்த்தபோது சஞ்சீவ்குமாரும், அனந்த ராமனும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.

மேலும், இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தகவலறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சஞ்சீவ் குமாரும், அனந்த ராமனும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...