கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சுவர் இடிந்து கூலித்தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிணத்துக்கடவு தேவனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் (41). இவர் நேற்று வடக்கிபாளையம் பகுதிக்கு வேலைக்குச் சென்றார். பின்னர் வேலைகளை முடித்து விட்டு மதிய உணவு உண்பதற்காக அங்கு உள்ள மதில் சுவர் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, மழையால் சேதமடைந்த இருந்த அந்த மதில் சுவர் திடீரென்று இடிந்து மணிகண்டன் மீது விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து மணிகண்டன் மீது விழுந்திருந்த இடிபாடுகளை அகற்றி அவரை மீட்டனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அங்கு இருந்தவர்கள் வடக்கிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, கோவை பெரியநாயக்கன் பாளையம், வெள்ளமடை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மகன் அஜய் (20), கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடையவில்லை என்பதால் மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில், விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.