இயற்கை விவசாயத்தை இளைஞர்கள்‌ தமிழகம்‌ முழுவதும்‌ கொண்டு செல்ல வேண்டும்‌ - ஈஷா நிறுவனர்‌ சத்குரு பொங்கல்‌ வாழ்த்து!

கோவை: படித்தவர்களும்‌, இளைஞர்களும்‌ இயற்கை விவசாயத்தை தமிழகம்‌ முழுவதும்‌ கொண்டு செல்ல பொங்கல்‌ திருநாளில்‌ உறுதி ஏற்க வேண்டும்‌ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு பொங்கல்‌ வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.


கோவை: படித்தவர்களும்‌, இளைஞர்களும்‌ இயற்கை விவசாயத்தை தமிழகம்‌ முழுவதும்‌ கொண்டு செல்ல பொங்கல்‌ திருநாளில்‌ உறுதி ஏற்க வேண்டும்‌ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு பொங்கல்‌ வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.

பொங்கல்‌ இருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது :-

தமிழ்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ மனமார்ந்த பொங்கல்‌ நல்வாழ்த்துக்கள். பொங்கல்‌ என்றால்‌ நாம்‌ சாப்பிடும்‌ விஷயமல்ல. பொங்கல்‌ என்பதை நம்‌ கலாச்சாரத்தில்‌ உழவர்‌ திருநாளாக கொண்டாடுகிறோம்‌. முக்கியமாக இது விவசாயத்துடன்‌ சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்நாளில்‌, படித்தவர்களும்‌ இளைஞர்களும்‌ கிராமங்களுக்கு சென்று விவசாயம்‌ எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்‌.

நீங்கள்‌ விரும்பினால்‌ ஈஷா விவசாய இயக்கத்தின்‌ மூலம்‌ உங்களுக்கு இயற்கை விவசாயத்கை கற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம்‌. அதை கற்றுக்கொண்டு நீங்கள்‌ கிராமத்திற்கு சென்று குறைந்தப்பட்சம்‌ ஒரு 10 பேருக்காவது சொல்லி கொடுக்க வேண்டும்‌. இப்படி செய்தால்‌ நாட்டில்‌ ஒரு பெரும்‌ புரட்சியே நடந்துவிடும்‌.

அதுமட்டுல்ல, நாம்‌ உண்ணும்‌ அன்னம்‌ நம்‌ உயிருக்கு உதவியாக இருக்கும்‌. நீங்கள்‌ சாப்பிடும்‌ அன்னத்தால்‌ தான்‌ சர்க்கரை நோய்‌ உள்ளிட்ட நோய்கள்‌ வருவதாக மருத்துவர்கள்‌ சொல்கின்றனர்‌. இதை நாம்‌ மாற்ற வேண்டும்‌. நெல்‌ உள்ளிட்ட அனைத்து பயிர்களையும்‌ இயற்கை விவசாயத்தின்‌ மூலம்‌ விளைவிக்க வேண்டும்‌. நம்‌ முன்னேற்றத்துக்கும்‌ ஆரோக்கியத்துக்கும்‌ இது மிகவும்‌ முக்கியமானதாகும்‌.

நம்‌ தமிழ்நாட்டில்‌ இயற்கை விவசாயத்தை கொண்டு வந்து உணவை சத்துமிக்க உணவாக மாற்ற வேண்டும்‌. மண்ணை சத்தான மண்ணாக வைத்துக்கொள்ள வேண்டும்‌. இயற்கையை நல்ல நிலையில்‌ வைத்து கொள்ள இயற்கை விவசாயம்‌ மிக தேவையானது. மேலும்‌, பொருளாதாரத்தில்‌ உழவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்‌.

ஆகவே, இயற்கை விவசாயத்தை தமிழகம்‌ முழுவதும்‌ கொண்டு சேர்க்கும்‌ உறுதியை தமிழ்‌ மக்கள்‌ அனைவரும்‌ இந்த பொங்கல்‌ திருநாளில்‌ எடுக்க வேண்டும்‌. அதிலும்‌ குறிப்பாக, தமிழ்‌ இளைஞர்கள்‌ இந்த உறுதியை கட்டாயம்‌ எடுக்க வேண்டும்‌. இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...