கோவை வெள்ளலூர் குப்பைகிடங்கில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால் பயோ மைனிங் திட்டம் துவங்குவதில் தாமதம்!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைகிடங்கில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக குழுவினர் இன்னமும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், திட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பைகிடங்கில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக குழுவினர் இன்னமும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், திட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது.

இதற்காக வெள்ளலூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள் அளவு எவ்வளவு, என்ன மாதிரியான குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன என்பது குறித்து அளவீடு செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இங்கு தேங்கியுள்ள குப்பைகளை அளவீடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இதுகுறித்த ஆய்வு அறிக்கையை மாநகராட்சி நிர்வாகத்திடம் இன்னமும் அக்குழுவினர் சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக பயோ மைனிங் திட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெள்ளலூர் குப்பை கிடங்கில் டிரோன் கேமரா மூலம் குப்பையின் அளவை சர்வே செய்யும் பணி நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் பயோ மைனிங் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்,’’ என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...