கோவை: என் மகன் குற்றவாளி என்று காவல்துறை தீர்மானித்தால் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எனது மகன் குற்றவாளி என்று காவல்துறை தீர்மானித்தால் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுகவை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த சவாலை மு.க.ஸ்டாலினால் ஏற்க முடியவில்லை எனவும் தேர்தல் நேரத்தில் திமுகவினர் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
அதேபோல, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எனது மகன் குற்றவாளி என்று காவல்துறை தீர்மானித்தால், தன்னுடைய 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தகுந்த ஆதாரங்களுடன் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா என்றவர், ஆதாரத்தை திரட்ட முடியவில்லை எனில் திமுக தலைவர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலக தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.