கோவை: கோவை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியலை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கேட்கப்பட்டுள்ளது, என கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதிகளின் 7 -ன்படி அரசு பணியாளர்கள், தங்களது பெயரிலோ குடும்ப உறுப்பினர் பெயரிலோ அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பது, விற்பனை செய்வது, காலி மனை வாங்கும்போது அதற்கான நிதி ஆதாரம் சமர்ப்பிப்பது போன்ற விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
பணியில் சேர்ந்த காலத்தில், தமக்கிருந்த சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், 5 ஆண்டுக்கு ஒருமுறை சொத்துக்கள் மற்றும் கடன் விவர அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால் பலரும் சொத்துப் பட்டியலை சமர்ப்பிப்பது இல்லை.
இதனிடையே, மாநகராட்சி ஊழியர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும், என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கேட்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதனால், முறைகேடாக குறிப்பாக லஞ்ச பணத்தில், சொத்துகளை சேர்த்து வைத்துள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது, என எதிர்பார்க்கப்படுகிறது.