கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசின் விவசாய வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து போராட்டம்

கோவை: கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு மத்திய அரசின் விவசாய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு மத்திய அரசின் விவசாய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.



இதில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி சுப்புராயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாவட்ட தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், தங்கவேலு மற்றும் பலர் கலந்து கொண்டு சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் நாடாளுமன்ற எம்.பி சுப்புராயன் கூறியதாவது: மத்திய அரசு இயற்றிய விவசாய வேளாண் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்புரேட்களுக்கு ஆதராவான சட்டம். விவசாய பொருட்களுக்கு விலைகளை கார்ப்புரேட் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.

இந்த சட்டத்தால் பொது விநியோக முறை கைவிடப்படும், ரேசன் கடைகள் மூடப்படும். எனவே, தான் இதனை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் போராடி வருகின்றனர், இவ்வாறு எம் பி சுப்புராயன், கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...