6 நாள் குழந்தையை மருத்துவமனையில் இருந்து தூக்கிச் சென்ற தந்தை; சி.சி.டி.வி. கேமரா மூலம் மீட்டனர்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன பெண் குழந்தையை தூக்கிச் சென்ற தந்தையை சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன பெண் குழந்தையை தூக்கிச் சென்ற தந்தையை சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்கள் ஆன பெண் குழந்தை நேற்று முன்தினம் மாலை காணாமல் போனது. இதுகுறித்து ஊட்டி போலீசில் சுகாதாரத்துறையினர் தகவல் செய்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர். குன்னூர் பில்லூர் மட்டம் பகுதியில் உள்ள கேமராவில் பதிவான காட்சியில், குழந்தையை தூக்கிச் செல்வது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த வழியாக தேடிச் சென்றனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனை டாக்டர் விஜயராஜ் மற்றும் செவிலியர்கள் போலீசாருடன் சென்று அங்கு மறைந்திருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு தாய் கவுரியிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் குழந்தையைக் கடத்தியது கவுரியின் கணவர் சண்முகவேல் (வயது 37) என்பதும், குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை தூக்கிச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து சண்முகவேலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...