பொள்ளாச்சி: மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி: மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் மற்றும் மகாலிங்கபுரம் கட்சி அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசுகையில், பொள்ளாச்சி பகுதிக்கு நல்ல திட்டங்கள் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்து விட்டன, வி.கே. பழனிச்சாமி முயற்சியால் கிடைத்த பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்திற்கு பிறகு, பெரிய அளவிலான எந்த திட்டமும் இங்கு செயல்படவில்லை. தனி மாவட்டம் ஆவதற்கு எல்லா தகுதியும் பொள்ளாச்சி பகுதிக்கு உள்ளது.
பொள்ளாச்சி பல்வேறு வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய பகுதி, பொள்ளாச்சி எனும் நகரம் பாலியல் குற்றங்களுக்கு புகழ் பெறக்கூடாது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு உள்ளது என ஊடகங்கள் மூலமாக நிரூபணமாகியுள்ளது. எனவே, இனியும் காத்திருக்காமல் நல்லவர்கள் ஆட்சிக்கு வர மக்கள் வழி செய்ய வேண்டும்.
நீர், நிலம் உள்ளிட்ட அனைத்து வகை வளங்களும் பெற்ற இந்த பகுதி, நல்வழியில் உபயோகமாக இருக்க வேண்டுமே தவிர, கொள்ளையர்கள் கொள்ளையடிக்க ஒரு கொலைக் களமாக மாறிவிடக்கூடாது என்று, அவர் தெரிவித்தார்.