கோவை: அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: போகி பண்டிகையையொட்டி பெரியார் புத்தகங்களை எரிக்க முயன்றதாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் பிரசன்னா சாமி கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. பழையன கழிந்து புதியன நம் வாழ்வில் வரவேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடத்தில் வீடுகளில் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் கழிவுப்பொருட்களை இந்த நாளில் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். இது தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு முந்தின நாளில் போகி பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல நம்முடைய மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டு மனதில் உற்சாகமும், புதிய எண்ணங்களும் உதயமாகும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று பெரியாருடைய புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியின் பிரசன்னா சாமி கைது செய்யப்பட்டார். போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இப்பண்டிகையையொட்டி இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் புத்தகங்கள் இருப்பதாகக்கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் அவரது புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயன்றனர்.
கட்சியின் மாநில துணைத்தலைவர் பிரசன்ன சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் `பெரியாரின் கடவுள் மறுப்பு, பெண் ஏன் அடிமையானாள்' உள்ளிட்ட அவரது புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்துவதில் அக்கட்சியினர் முனைப்பு காட்டினர். அப்போது போலீசார் இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் பிரசன்ன சாமியை கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அசோக் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.