கோவை: அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், `இந்த கிளினிக் மூலம் அட்டகட்டி, காடம்பாறை பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் வாட்டர்பாலில் உள்ள மக்கள் பயன்பெறும்வகையில் முதன்முறையாக அட்டகட்டி பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் வாட்டர்பால், காடம்பாறையில் அனைத்து தொழில்நுட்ப கருவிகளுடன் கொண்ட மருத்துவக்குழு இயங்கிக் கொண்டிருக்கும். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படும் வகையில் இந்த முதலமைச்சரின் மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், நகரச் செயலாளர் மயில் கணேசன், வால்பாறை வீ.அமீது, பொன் கணேசன், அம்மா பாசறைச் செயலாளர் சலாவுதீன், எஸ்.கே.எஸ்.பாலு, ஆர்.ஆர்.பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.