முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான பா.வே தாமோதரன் நுரையீரல் தொற்று காரணமாக கோவையில் காலமானார்

கோவை: அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா.வே தாமோதரன் இன்று காலமானார்.


கோவை: அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா.வே தாமோதரன் இன்று காலமானார்.

கடந்த 15 நாட்களாக தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த அவரின் உயிர் இன்று பிரிந்தது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவங்கியபோது 1972 ல் தொகுதி அமைப்பாளராக துவங்கி 33 வருடங்கள் சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்பைப் பெற்று பொங்கலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், என்று கட்சி தலைவர்கள் நினைவுகூர்ந்தனர்.

பின்னர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளராகவும் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார். தமிழகம் முழுவதும் தன்னை சந்திக்க வரும் ஒவ்வொரு தொண்டனுக்கும் உணவளித்து உதவி செய்து உபசரித்தவர், மறைந்த முன்னாள் அமைச்சர் ப வெ தாமோதரன் என்று புகழாரம் சூட்டினர்.

அதிமுக தோன்றிய காலம் முதல் தான் மறையும்வரை கழகத்திற்கு விசுவாசம் மாறாமல் பணியாற்றியவர் என்றும் தமிழகம் முழுவதும் அனைத்து நிர்வாகிகளையும் பேர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு எளிமையானவர். இவரது உபசரிப்புக்கு நிகர் இவரே தான், என அவர் வாழ்ந்த காலம் முழுவதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் ஆகியோருக்கு விசுவாசமாக இருந்தவர் என்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுக அனைத்து எம்எல்ஏக்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நாளை அவருடைய நல்லடக்கம் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...