தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரவே மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது - பொள்ளாச்சி ஜெயராமன்

திருப்பூர்: தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரவே அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், மக்களுக்கு ஒன்று என்றால் அதிமுக களத்தில் நிற்கும் என திருப்பூரில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரவே அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், மக்களுக்கு ஒன்று என்றால் அதிமுக களத்தில் நிற்கும் என திருப்பூரில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம் மற்றும் வாலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை துவக்கி வைத்தார்.



அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக மத்திய அரசுடன் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்காகவே இணக்கமாக இருப்பதாகவும், ஆனால் கூட்டணி வைத்ததற்காக பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், இதற்கு முன்னாள் திமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தை சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு தீங்கு என்றால் மக்களோடு களத்தில் அதிமுக நிற்கும் எனவும் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...