கூட்டணியை உடைக்க நினைக்கிறார் கே.பி.முனுசாமி: நல்வழிப்படுத்த முதல்வர், துணை முதல்வருக்கு ஹெச்.ராஜா வேண்டுகோள்!

பொள்ளாச்சி: பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் கே.பி.முனுசாமி. அவரை முதல்வரும், துணை முதல்வரும் நல்வழிப்படுத்த வேண்டுமென்று ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.


பொள்ளாச்சி: பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் கே.பி.முனுசாமி. அவரை முதல்வரும், துணை முதல்வரும் நல்வழிப்படுத்த வேண்டுமென்று ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.



பொள்ளாச்சியை அடுத்த ஆத்து பொள்ளாச்சியில் சமூக வலைதள தேசிய சிந்தனையாளர்கள் சங்கமம் என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, `தமிழகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் தொடரும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்தனர்.

ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை உடைப்பதற்காக உள்நோக்கத்தோடு செயல்படும் கே.பி.முனுசாமியை முதல்வரும், துணை முதல்வரும் நல்வழிப்படுத்த வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு பீகார் பார்ப்பனர் காலில் தி.மு.க. விழுந்துள்ளது. தற்போது பிரசாந்த் கிஷோர் காலடியில் கருணாநிதியின் புதல்வன் ஸ்டாலின் இருக்கிறார்' என்று கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...