கோவை: கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகுந்த 100-க்கும் மேற்பட்டோர் அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென வந்த 100-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், `கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது பள்ளி கட்டணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்தது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக தனி அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து என்னிடம் வாக்குவாதம் செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனவே, எனக்கும், ஊழியர்களுக்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் காரணமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.