கோவை: கோவை அருகே பள்ளி ஆசிரியையின் கணவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டதால் பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மகளின் முன்னாள் காதலன் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜான் (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தென்னை நார் தயாரிக்கும் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செலின், ஓடக்கள்பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் வழக்கம்போல் நேற்று பணிக்குச் சென்றனர். செலின் மாலையில்தான் வீடு திரும்புவார். சார்லஸ் மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றார்.
நீண்டநேரமாகியும் அவர் கம்பெனிக்கு வராததால் சந்தேகமடைந்த கம்பெனி ஊழியர்கள் கணேசன், தங்கராஜ் ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்றனர். கதவு திறந்திருந்ததால் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சார்லசின் சடலத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சார்லசுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணமான நிலையில் இரண்டாவது பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த கார்த்தி (வயது 23) என்பவர் ஒருதலையாகக் காதலித்தார். ஆனால் சார்லஸ் தன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சார்லஸை கார்த்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த விஷத்தை குடித்துவிட்டு அந்த தகவலை தன் நண்பர்களுக்கு போனில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த நண்பர்கள் கார்த்திக்கை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.
பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த கம்பெனி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுல்தான்பேட்டை பகுதி சுற்றுவட்டார கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.